அதிமேதகு சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் "சுபீட்சத்தின் நோக்கு" என்ற எண்ணக்கருவை யதார்த்தமாக்கும் வகையில் உற்பத்தியின் மூலம்  பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஓர் கட்டமாக, லங்கா சீனி நிறுவனத்துக்குச்  சொந்தமான பெல்வத்த சீனி உற்பத்தி  தொழிற்சாலையை நவீனமயப்படுத்தப்பட்டதோடு, இவ்வருடத்திற்கான முதல் கரும்பு அரைக்கும் நிகழ்வு 2021.02.18 ஆந் திகதியன்று நடைபெற்றது.


இத்தொழிற்சாலை கடந்த காலங்களில் நட்டத்தில் இயங்கி வந்துள்ளதோடு, தனியார் துறையினருக்கு விற்பனை செய்வதற்கு  பெயரிடப்பட்டுள்ளதுடன், 2011 ஆம் ஆண்டு அப்போதிருந்த சனாதிபதி மஹிந்த ராபக்ஷ அவர்களின் தலையீட்டால் அது அரசினால் கையகப்படுத்தப்பட்டது. அதிமேதகு சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையின் கீழ் ஒரு வருட காலப்பகுதியினுள் இலாபம் ஈட்டும் நிறுவனமொன்றாக மாற்றப்பட்டதோடு 5000 ஊழியர்களுக்கு தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு சுமார் பத்தாயிரம் கரும்பு விவசாயிகளை பொருளாதார ரீதியில் வலுவூட்டி தேசிய பொருளாதாரத்துக்கு பாரிய பங்களிப்கை வழங்கும் நிறுவனமாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.


நவீனமயப்படுத்தப்பட்டுள்ள இத்தொழிற்சாலைக்கு புத்த மந்திரய மற்றும் தொழிற்சாலை  வாகனச் சேவை நிலையமொன்றும் திறந்து வைக்கப்பட்டுள்ளதோடு, இச்சந்தர்ப்பத்திற்கு கெளரவ இராஜாங்க அமைச்சர் ஜனக  வக்குபுர அவர்கள், இராஜாங்க அமைச்சர் விஜித பேரகொடை அவர்கள், மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் புஷ்பகுமார அவர்கள், சீனி நிறுவனத்தின் தலைவர், ஊழியர்கள் மற்றும் அமைச்சின் உத்தியோகத்தர்கள் உள்ளடங்கலானோர் கலந்து  கொண்டார்கள்.