பெருந்தோட்ட அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான மலேசியாவின் உயர் ஸ்தானிகர் மேன்மை தங்கிய டான் யாங் தாய்  (H.E.)  Tan Yong Thai ஆகியோருக்கன சந்திப்பு நேற்று 2022.03.22 ஆந் திகதி அமைச்சின் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

கோவிட்-19 தொற்றுநோய் ஏற்பட்டதைத் தொடர்ந்து தற்போதைய காலகட்டத்தில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இந்த சந்திப்பு கவனம் செலுத்தியது.

உலகின் மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான இலங்கைக்கு எதிர்வரும் காலங்களில் அதிகமான மலேசிய சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கும்  மலேசிய முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வந்து முதலீடு செய்வதற்கும் ஏற்ற சூழலை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மலேசிய தூதுவர் குழுவின் பிரதித் தலைவர் திருமதி கைரீ ஷாதிலா மற்றும் பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் ரவீந்திர  ஹேவாவிதாரண அவர்கள் கலந்து கொண்டார்கள்.