அதிமேதகு சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் "சுபீட்சத்தின் நோக்கு" என்ற எண்ணக்கருவை யதார்த்தமாக்கும் வகையில்
இரசாயன பசளை வகைகளின் பயன்பாடு இலங்கையில் நிறுத்தப்பட்டவுடன் இந்நாட்டு விவசாயிகள் அசேதன உரப் பாவனையின் பால் ஈடுபாடு காட்டும் இவ்வேலையில் தேசிய உரங்களின் தேவையை நூற்றுக்கு பத்து வீத (10%) அளவு உற்பத்தி செய்யும் வகையில் உயிரியில் உர உற்பத்தித் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா 2021.08.14 ஆந் திகதி பெல்வத்த லங்கா சீனி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.
இச்சந்தர்ப்பத்திற்கு கெளரவ பெருந்தோட்ட அமைச்சருடன் கெளரவ இராஜாங்க அமைச்சரான ஜானக வக்குபுர அவர்கள், ஷசிந்திர ராஜபக்ஷ அவர்கள், பிரதேச சபைகளின் தலைவர்கள் உள்ளடங்கலாக உறுப்பினர்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட லங்கா சீன நிறுவனத்தின் உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.