அதிமேதகு சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் "சுபீட்சத்தின் நோக்கு" என்ற எண்ணக்கருவை யதார்த்தமாக்கும் வகையில் இந்நாட்டின் தேயிலைச் செய்கையை கட்டியெழுப்பும் நோக்கினை முன்னிருத்தி, அசேதன உரத்தை தேயிலைச் செய்கைக்குப் பயன்படுத்தும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்தோட்டக்காரர்களுக்கு அசேதன உரத்தை வீட்டுத் தோட்டத்திலே உற்பத்தி செய்து கொள்வதற்கு அவசியப்படும் பயிற்சியினை வழங்குவதற்காக வல்ஹதூவ சிறு தேயிலைத் தோட்ட அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள அசேதன உர உற்பத்தித் தொழிற்சாலை கெளரவ பெருந்தோட்ட அமைச்சரின் மேற்பார்வைக்கு உட்பட்டது.
மேலும் காலி மாவட்டத்தின் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு அவசியப்படும் T 65 தேயிலைக் கன்றுகளுக்கான உரம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
பெருந்தோட்ட அமைச்சுக்குச் சொந்தமான சிறு தேயிலைத் தேட்ட அதிகார சபையின் வழிகாட்டலின் கீழ் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வுக்கு, கெளரவ அமைச்சருடன் நிறுவன தோட்ட சீர்திருத்தங்கள் கெளரவ இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் அவர்கள், சிறு தேயிலைத் தொட்ட அதிகார சபையின் தலைவர், பொது முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.