இங்கு தேயிலை தொழில்துறையின் பங்குதாரர்களுக்கு மிகச் சிறந்த அணுகல், காலத்துக்கேற்ற  பகுப்பாய்வு மற்றும் விரிவாக்க சேவையை வழங்கும் அடிப்படை நோக்கத்தை யதார்த்தமாக்கும் வகையில் வெற்றிகரமாக நிறுவப்பட்ட இந்த நடமாடும் ஆய்வுக்கூடம் மற்றும் விரிவாக்க சேவையின் மூலம், சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் அவர்களின் பயிர்ச்செய்கையில் தேயிலைச் செய்கைக்கான மண்ணின் நிலைமைகள், நோய்கள் பற்றி கண்டறிதல் போன்ற ஆய்வக தொழில்நுட்ப வேலைகளை செய்யலாம். அதுவானது தேயிலை தொழில் வளர்ச்சிக்கு பாரிய உந்துதலாக அமையும்.

இந்நாட்டு  பெருந்தோட்டக் கைத்தொழில், விவசாயத் துறை என்பன நீண்ட காலமாக வளர்ச்சியடைந்து வருகின்றது, ஆனால் தொழில்துறையின் வளர்ச்சிக்குத் தேவையான அறிவு மற்றும் திறன்கள் கல்வி முறையின் ஊடாக முறையாகக் கடத்தப்படாததால், தொழிலை அடிப்படையாகக்  கொண்ட கல்வி முறையை  நோக்கி அதனூடாக பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என 2022.09.09 ஆந் திகதியன்று இரத்தினபுரி இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தில் அதன் நடமாடும் ஆய்வுகூடம் மற்றும் விரிவாக்க சேவையை அறிமுகம் செய்யும் நிகழ்வில் கலந்து கொண்ட கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரன இதனை தெரிவித்தார். இது நடாத்தப்படுவது சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்காக நடாத்தப்படும்  42 ஆம் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க சேவையுடன் இணைந்ததாகும்.

இந்நிகழ்வில் அமைச்சின் அதிகாரிகள், இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனம், சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை மற்றும் இலங்கை தேயிலை சபையின் உத்தியோகத்தர்கள், சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள், தோட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்பான சங்க உறுப்பினர்கள், தேயிலை கைத்தொழில் துறையில் ஈடுபடுபவர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.