பயிரிடுபவர்களின் வசதிக்காகவும், நிறுவன நடவடிக்கைகளை முறைமைப்படுத்துவதற்காகவும் பயிரிடுபவர்களின் அனைத்துத் தேவைகளையும் ஒரே கூரையின் கீழ் இலகுவாக மேற்கொள்ளும் வகையில் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படவுள்ள சிறு தேயிலை அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலக வலையமைப்பின் முதல் மாதிரி அலுவலகம் 2022.11.01 ஆந் திகதி பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் கெளரவ லெஹான் ரத்வத்தே அவர்கள் மற்றும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கெளரவ கனக ஹேரத் அவர்களின் தலைமையின் கீழ் இடம்பெற்றது.
பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கெளரவ லொஹான் ரத்வத்தே அவர்கள் இதன் போது கருத்துத் தெரிவிக்கையில், நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள போதிலும், மக்களின் நலன்கள் மற்றும் வசதிக்காக தமது அமைச்சுக்கு உரித்தான நிறுவனங்களின் ஊடாக மக்களுக்கு வழங்க முடியுமான அதிகபட்ச நிவாரணங்களையும் சேவைகளையும் வழங்க முடியும் என பெருந்தோட்டக் கைத்தொழில் அமச்சர் கெளரவ ரமேஷ் பத்திரண அவர்களுடன் இணைந்து மேற்கொள்ள முடியுமான அனைத்து செயற்பாடுகளும் செய்வதாகவும், கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு முடிவுகள் விரைவாக எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், பெருந்தோட்ட அமைச்சின் ஊடாக, ஏனைய நிறுவனங்களின் மட்டத்திலும் ஆரம்பிக்கக்கூடிய இவ்வாறான 'One Stop Shop' வலையமைப்பை நாடு பூராகவும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். அதன் மூலம் மக்களுக்குரிய பணிகளை எளிதாக்குவதுடன் அலைந்து திரிவதை குறைக்கும் வகையில் அமையும் எனவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் கெளரவ ரமேஷ் பத்திரண அவர்களின் பூரண வழிகாட்டலின் கீழ், அப்போதைய பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கெளரவ கனக ஹேரத் அவர்களின் முன்மொழிவின் பிரகாரம், இதற்கு ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு இந்த நிர்மாணப் பணிகளுக்காக 50 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளது.
அதனுடன், இங்கு சிறு தேயிலை அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட உபகரணத் தொகுதிகளின் விநியோகமும் அடையாள ரீதியாக அமைச்சரின் கரங்களால் வழங்கப்பட்டது.
இந்த திறப்பு விழாவிற்கு கேகாலை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேசத்தின் அரசியல் அதிகாரங்கள் மற்றும் சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டார்கள்.