பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன அவர்களின் தலைமையில், பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அவர்களின் பங்குபற்றுதலின் கீழ், தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தனித் தரிப்பிட வர்த்தக சேவை நிலையம் (One - Stop Business Center) அண்மையில் கொழும்பு, டியூக் வீதியில் திறந்து வைக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர், 2025-2026 ஆம் ஆண்டளவில் தென்னை சார்ந்த கைத்தொழிலின் ஏற்றுமதி வருமானம் ஒரு பில்லியன் டொலர்களை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த மூன்று வருடங்களில் தென்னை அபிவிருத்திக்காக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு பல முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளது. அதில் மரம் வெட்டும் சட்டத்தில் சேர்க்கப்படாத தென்னை மரம், தென்னை மரங்களை வெட்டும் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், தென்னை நிலங்களை துண்டாடுவதற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு கட்டாய தேவையின் அடிப்படையில் மாத்திரம் நிலங்களை துண்டாடுவதற்கு சபையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், கடந்த வருடத்தின் இறுதிக் காலாண்டில் உலக சந்தை நிலவரங்களுடன் குறிப்பிடத்தக்களவு கேள்வி குறைந்திருந்த போதிலும், தேங்காய் ஏற்றுமதியாளர்கள் 800 மில்லியன் டொலர்களை தாண்டும் இலக்கை எட்டியுள்ளதாகவும் தற்போது, தேயிலையுடன் ஒப்பிடும்போது, தேங்காய் உற்பத்திப் பொருட்கள், குறிப்பாக தேங்காய் மா, தேங்காய் பால், தேங்காய் தண்ணீர் மற்றும் இளநீர் ஆகியவற்றின் தேவை படிப்படியாக அதிகரித்து வருகிறது. எனவே, தற்போது தென்னை கைத்தொழிலை நாம் நம்பிக்கையுடன் பார்க்க முடியுமாக உள்ளதோடு, மேலும் ஒரு பில்லியன் டாலர் ஏற்றுமதி வருமானத்தை மிக விரைவில் பெற முடியும், பின்னர் அதை இரட்டிப்பாக்க எதிர்பார்க்கப்படுவதாகவும், அதற்காக நாட்டிலுள்ள சகல மாகாணங்களிலும் தெங்குச் செய்கையை விஸ்தரிக்கப்பதற்காக அவசியப்படும் நடவடிக்கைகளை முன்னெடுக்க எமது அமைச்சு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த புதிய நிலையங்கள் மூலம், 820 மில்லியன் டாலர்கள் வருடாந்த ஏற்றுமதி வருமானத்தை வழங்குகின்ற தென்னை கைத்தொழில் துறையில் ஈடுபட்டுள்ள 2000க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்டவர்கள் உட்பட மொத்தம் 3000 க்கும் மேற்பட்டவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு இந்த துறையில் புதிதாக சேர விரும்புபவர்களுக்கும் அவசியப்படும் வசதி வாய்ப்புக்களை ஒரே இடத்தில் இருந்து வழங்க எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக 24 மணியாளங்கள் பூராகவும் செயற்படும் வாடிக்கையாளர் சேவை நிலையம் (24/7 Customer Care Center), தொலைபேசி அழைப்பு நிலையம் ( Call Center), ஊடாகப் பிரிவு ( Media Unit) தகவல் தொழில்நுட்பப் பிரிவு ( IT Unit) , விற்பனை புலனாய்வுப் பிரிவு ( Marketing Intelligence Unit) என பல துறைகள் இந்த புதிய நிலையத்தினால் செயல்படுகின்றன.
இந்நிகழ்வில், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜானக தர்மகீர்த்தி, கைத்தொழில் அமைச்சின் மேலதிக செயலாளர் ஷமிந்த பத்திராஜ, தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் ரொஷான் பெரேரா மற்றும் அரச அதிகாரிகள், தேங்காய் ஏற்றுமதி துறையின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.