பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சுக்குச் சொந்தமான அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் கீழ் உள்ள கண்டி, கோமர தோட்டத்தில் 17 மில்லியன் ரூபா முதலீட்டில் நவீன தொழில்நுட்பத்துடன் மீள புனரமைக்கப்பட்ட தேயிலை தொழிற்சாலையை திறந்து வைப்பதற்காக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் திரு. வைத்தியர் ரமேஷ் பத்திரன அவர்களின் தலைமையில், பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் திரு. லொஹான் ரத்வத்த அவர்களின் பங்கேற்புடன் அண்மையில் நடைபெற்றது.
இங்கு அமைச்சர் பேசுகையில், “அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் கடந்த வருடம் ரூபா. 42 மில்லியன் தொகையை நிகர இலாபமாகப் பெற்றுக்கொண்டதாகவும், கோமர தோட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள இந்த தேயிலை தொழிற்சாலை நாளைய தினம் மீண்டும் தேயிலைச் செய்கை மற்றும் தரமான தேயிலை உற்பத்தியின் இலக்குகளை மேம்படுத்த உதவும் எனவும்" அவர் தெரிவித்தார்.
இங்கு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், 600 ஹெக்டேயர் நிலப்பரப்பை மீண்டும் செயலில் உள்ள தேயிலை பயிர்ச்செய்கை பிரதேசமாக மாற்றும் நோக்கிற்கு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு அதிகபட்ச ஆதரவை வழங்க நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சினால் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நேரடி தேயிலை பயிர்ச்செய்கையை ஊக்குவிப்பதற்கும், அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக இது போன்ற புதிய தொடக்கங்களுக்கு அத்திவாரமிட்டு தேயிலைச் செய்கை தொழிற்துறைக்கு கிடைக்கப்பெறும் சிறந்த ஊக்கமாகும் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜனக தர்மகீர்த்தி உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள், அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி ஸ்ரீமால் விஜேசேகர மற்றும் அதன் அதிகாரிகள், ஜனதா தோட்ட அபிவிருத்திச் சபையின் தலைவர் மற்றும் அதிகாரிகள், பெருந்தோட்டத்துறை மற்றும் அதனுடன் தொடர்புடைய முக்கியஸ்தர்கள் மற்றும் பிரதேச மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.