ICC (2)  13
 14  15

சர்வதேச தென்னை சமூகத்தின் (ICC) 60வது அமர்வு மற்றும் அமைச்சர்கள் கூட்டம் நவம்பர் 25 முதல் 28 வரை கொழும்பு ஹில்டனில் நடைபெற்றது.
பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு கௌரவ அமைச்சர் திரு.சமந்த வித்யாரத்ன அவர்களால் அமர்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. அமைச்சின் செயலாளர் திரு.பிரபாத் சந்திரகீர்த்தி, இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் மற்றும் இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, ஜமைக்கா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட 21 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 70 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடு, தென்னை பயிர்ச்செய்கையுடன் தொடர்பான விடயங்களான, பூச்சிகள் மற்றும் நோய்கள் உள்ளிட்ட தென்னைத் துறையை பாதிக்கும் முக்கியமான பிரச்சினைகள், மதிப்பிடல் மற்றும் உற்பத்தி சவால்கள், சந்தை மற்றும் ஆராய்ச்சி, சர்வதேச ஒத்துழைப்பு ஆகியன தொடர்பாக விவாதிக்கப்பட்டன.
அமர்வில் உரையாற்றிய உலக தென்னை சமூகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான திருமதி கெல்பினா அலோய்கா அவர்கள், மிகவும் வெற்றிகரமான அமர்விற்கு பங்களித்த அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.