|
|
|
|
2004 ஆம் ஆண்டு எமது நாட்டில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் பின்னர், உயிரிழந்த மற்றும் உடமைகள் சேதமடைந்த மக்களுக்கு உதவும் நோக்கில், சுனாமி அனர்த்தத்தினால் சேதமடைந்த சுமார் நானூறு ஏக்கர் நிலத்தில் கறுவா உற்பத்தியை அபிவிருத்தி செய்து, முதல் அறுவடையை இறைவனுக்கு வழங்கும் திருவிழா காலி, ஹிக்கடுவ, சீனிகம தேவாலய கடவுளின் பொருட்டு பிரதேசத்தில், மக்களின் புதிய கறுவா உற்பத்தியை அறுவடை செய்து இம்மாதம் 21 ஆம் திகதி சனிக்கிழமை பத்தொன்பதாவது முறையாக சீனிகம ஆலய வளாகத்தில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.
அதன்போது ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் காலி மாவட்ட உதவிப் பணிப்பாளராக இருந்த திரு.ஜானக லிந்தர அவர்களின் கருத்தின்படி 2006 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் தனது நிறுவன ஊழியர்களின் ஒத்துழைப்புடன் இந்த விழா முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்டது. அவர் தற்போது பணிப்பாளர் நாயகமாக பதவி வகிக்கும் கறுவா அபிவிருத்தி திணைக்களத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் ஹிக்கடுவ பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளின் மத்தியில் இலங்கையின் கறுவா உற்பத்தி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் பிரபலப்படுத்துவதும் இந்நிகழ்வின் நோக்கங்களில் ஒன்றாக காணப்பட்டது.
தென் மாகாண ஆளுநர் திரு.பந்துல ஹரிச்சந்திர மற்றும் கௌரவ தொழிற்கல்வி பிரதி அமைச்சர் திரு.நளீன் ஹேவகே அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தென்மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.அர்ஜுன வேலாரத்ன, பெருந்தோட்டங்கள் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி நயனா டி சில்வா, இலங்கை மசாலா பேரவை திரு. டி.ஏ. பெரேரா, ஏற்றுமதி விவசாய பணிப்பாளர் நாயகம் செல்வி ஏ.பி.பி.திஸ்னா, கறுவா அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு.ஜானக லிந்தர உட்பட திணைக்கள ஊழியர்கள், இலங்கை கறுவாப்பட்டையின் பாதுகாக்கப்பட்ட புவியியல் குறிகாட்டிகள் சங்கம், காலி மாவட்ட கறுவா உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் காலி மாவட்ட தாவர தவானை சங்கம் உட்பட பல மாவட்டங்களின் தாவர தவானைகளில் உள்ளவர்கள் உட்பட அனேகமானோர் கலந்துகொண்டனர். இதற்காக நிதியுதவியினை அனுசரனையுடன் பவர்ஸ் தனியார் நிறுவனம் வழங்கியது.