தேயிலை, இறப்பர் மற்றும் தென்னைத் தோட்ட (துண்டாடப்படும் காட்டுப்பாடு) சபை

பொதுமக்களுக்கு விடுக்கும் அறிவித்தலாகும்!

தேயிலை, இறப்பர் மற்றும் தென்னை நிலங்கள் துண்டு துண்டாக பிரிக்கப்படுவதால் தேசிய பொருளாதாரத்தில் ஏற்படுகின்ற தாக்கத்தைக் குறைக்கும் நோக்கில், 2005 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க தேயிலை, இறப்பர் மற்றும் தென்னை தோட்டங்கள் (துண்டாடப்படும்) கட்டுப்பாட்டு (திருத்தம்) சட்டத்தால் திருத்தப்பட்ட 1958 ஆம் ஆண்டு 02 ஆம் இலக்க தேயிலை, இறப்பர் மற்றும் தென்னை தோட்டங்கள் (துண்டாடப்படல் கட்டுப்பாடு) சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதுள்ள சட்ட கட்டமைப்பிற்குள் 4 ஹெக்டேருக்கு குறையாத தென்னை நிலங்கள் மற்றும் 20 ஹெக்டேருக்கு குறையாத இறப்பர் மற்றும் தேயிலை நிலத்தின் உரிமை மாற்றுகின்ற சந்தர்ப்பத்தில் தேயிலை, இறப்பர் மற்றும் தென்னந்தோப்புச் ( துண்டாடப்படுவதனை கட்டுப்படுத்தல்) சபையின் இணக்கப்பாட்டினைப் பெறல் வேண்டும் என்பதோடு அவ்வாறு இணக்கப்பாட்டினைப் பெறாத உரிமை மாற்றங்கள் இந்த சட்டத்தின் படி சூன்யமாக்கப்படும் மற்றும் செல்லுபடியற்ற உரிமை மாற்றமாக அமையும்.

ஆனால் தற்சமயம் எந்தவித திட்டமிடல்களும் இன்றி, பல்வேறு செயற்திட்டங்களுக்காக தேயிலை, தென்னை, இறப்பர் தோட்டங்களைக் கொண்ட காணிகளை துண்டாடுதல் மற்றும் நிலவுகின்ற பயிர்ச் செய்கைகள் அழிக்கப்பட்டு வருவதனால், நடைமுறையில் உள்ள சட்டத்தை திருத்தியமைத்து பயிர்களைப் பாதுகாப்பதற்கான தேவை எழுந்துள்ளது.

இதுகுத்து உங்கள் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் எமக்கு அனுப்புங்கள்!

2005 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க தேயிலை, இறப்பர் மற்றும் தென்னை தோட்டங்கள் (துண்டாடப்படல்) கட்டுப்பாட்டு (திருத்தம்) சட்டத்தால் திருத்தப்பட்ட 1958 ஆம் ஆண்டு 02 ஆம் இலக்க தேயிலை, இறப்பர் மற்றும் தென்னை தோட்டங்கள் (துண்டாடப்படல் கட்டுப்பாடு) சட்டத்தை திருத்தியமைத்தல்.

இதற்காக உங்களது கருத்துக்களையும், முன்மொழிவுகளையும் உங்களுக்கு இலகுவான மொழி மூலத்தில் (சிங்களம் / தமிழ்/ஆங்கிலம்) 2025.08.15 ஆந் திகதிக்கு முன்னர் எமக்கு அனுப்பி வைக்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறேன். அதனை உங்களது ஆளடையாளத்துடன் அல்லது ஆளடையாளமின்றியும் சமர்ப்பிக்க முடியும் என்பதோடு, நீங்கள் வழங்கும் கருத்துக்களுக்கு நன்றி பாராட்டுகிறோம்.

உங்கள் கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் அனுப்ப வேண்டிய வழி:

மின்னஞ்சல் முகவரி: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

தொலைபேசி இலக்கம்: 011 2186200

முகவரி:
தேயிலை, இறப்பர் மற்றும் தென்னைத் தோட்டங்கள் (துண்டாடல் கட்டுப்பாடு) சபை,
10ஆம் மாடி, செத்சிரிபாய, இரண்டாம் கட்டம், பத்தரமுல்ல.

மேலதிக விபரங்களை அறிய:
பிரதிப் பணிப்பாளர்
தேயிலை, இறப்பர் மற்றும் தென்னைத் தோட்ட (துண்டாடப்படல் காட்டுப்பாடு) சபை
தொலைபேசி இலக்கம் : 011 2186200

தலைவர்
தேயிலை, இறப்பர் மற்றும் தென்னைத் தோட்ட (துண்டாடப்படல் காட்டுப்பாடு) சபை

தேயிலை, இறப்பர் மற்றும் தென்னைத் தோட்டங்கள் (துண்டாடப்படல் கட்டுப்பாடு) சபை