பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சினால் இதன் இரண்டாம் கட்டம் (Stage 2) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், அமைச்சின் கீழுள்ள மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை (JEDB), இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் (SLSPC) மற்றும் எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனம் (EPL) ஆகியவற்றுக்குச் சொந்தமான, குறைவான பயன்பாட்டில் உள்ள காணிகள் மற்றும் சொத்துக்களை உகந்த முறையில் அபிவிருத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முதலீட்டு வாய்ப்புகளுக்காக தகுதியுடைய உள்நாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து விருப்பப் பிரகடனங்கள் (EOI) ஏற்கனவே கோரப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, மொனராகலை, கேகாலை மற்றும் காலி போன்ற மாவட்டங்களில் அமைந்துள்ள பெரிய தோட்டக் காணிகள், தேயிலைத் தொழிற்சாலைகள் மற்றும் பங்களாக்களில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இது பற்றிய மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள பின்வரும் இணையத்தளத்திற்கு விஜயம் செய்யுங்கள்:



