தென்னைத் துறைக்கான பத்து வருட வீதி வரைபடம் மற்றும் ஐந்து வருட மூலோபாயத் திட்டத்தைத் தயாரிப்பது தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைக் கோரல்

    1. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் மேற்பார்வையின் கீழ், ஐக்கிய நாடுகளின் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பின் (UNIDO) நிதிப் பங்களிப்புடனும், கொள்கை ஆய்வு நிறுவனத்தின் (Institute of Policy Studies) வளப் பங்களிப்புடனும், இலங்கையின் தென்னை உற்பத்தித் துறைக்காகப் பத்து வருட வீதி வரைபடம் மற்றும் ஐந்து வருட மூலோபாயத் திட்டமொன்றைத் தயாரிக்கும் கருத்திட்டம் 2025 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.
    2. 2030 ஆம் ஆண்டளவில் தென்னைத் துறையிலிருந்து பெறப்படும் ஏற்றுமதி வருமானத்தை 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிப்பதும், நாட்டின் வருடாந்த தேங்காய் விளைச்சலை 4.2 பில்லியன் தேங்காய்கள் வரை உயர்த்துவதும் இக்கருத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
    3. இது தொடர்பில் தென்னைத் துறையுடன் தொடர்புடைய அனைத்துப் தரப்பினர்களுடனான – அதாவது பயிர்ச்செய்கையாளர்கள், கைத்தொழிலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தென்னைத் துறையுடன் இணைந்த அரச நிறுவனங்கள் (தென்னை பயிர்ச்செய்கை சபை, தென்னை அபிவிருத்தி அதிகாரசபை, தென்னை ஆராய்ச்சி நிறுவனம் போன்ற) மற்றும் இது குறித்து ஆர்வமுள்ள தரப்பினர்களுடனும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டு, இவ்வீதி வரைபடம் மற்றும் மூலோபாயத் திட்டத்தின் வரைபு தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட வரைபு பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மற்றும் வரைபினைப் பின்வரும் இணைப்பின் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
    4. இந்த வரைபை மேலும் மேம்படுத்துவதற்கு உங்களது கருத்துக்களும் ஆலோசனைகளும் மிகவும் முக்கியமானவை என்பதால், கீழ் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்திற்கு அமைய, செயலாளர், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு, 11 ஆம் மாடி, செத்சிரிபாய 2 ஆம் கட்டம், பத்தரமுல்லை என்ற முகவரிக்கு எழுத்துப்பூர்வமாகவோ அல்லது இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 011-2186093 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ சமர்ப்பிக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
    5. நாட்டின் தென்னைத் துறையின் அபிவிருத்திக்காக நீங்கள் வழங்கும் ஒத்துழைப்பு பெரிதும் பாராட்டத்தக்கது.