class1  ICC (2)
 ICC (2)  ICC (2)

இலங்கை மலையக பெருந்தோட்ட பாடசாலைகளின் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் முகமாக இந்திய அரசாங்கத்தால் அன்பளிப்பாக 508 மில்லியன் ரூபாய் கிடைக்க பெற்றுள்ளதுடன், இலங்கை அரசாங்கத்தினால் 115 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டு நுவரெலியா, கண்டி, பதுளை போன்ற மாவட்டங்களில் உள்ள 60 பெருந்தோட்ட பாடசாலைகளளுக்கான ஸ்மார்ட் வகுப்பறைகள் நிர்மாணிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று நேற்றைய தினம் பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் திரு. பிரபாத் சந்திர கீர்த்தி தலைமையில் இந்திய தூதுவர் திரு ,சந்தோஷ் ஜா மற்றும் அமைச்சின் முக்கியஸ்தர்களால் இந்தியா தூதரகத்தில் வைத்து கைசாத்திடப்பட்டதுடன்.
கல்வி,டிஜிட்டல் தொழி நுட்பத்தின் ஊடாக நல்லதொரு எதிர்கால சமூகத்தை உருவாக்குவதன் மூலம் இரண்டு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்திக் கொள்ள முடியும் என்பதே இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.