கடந்த 2020.06.01 ஆந் திகதியன்று கெளரவ பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதிக் கமத்தொழில் அமைச்சர் ரமேஷ் பதிரண அவர்களின்  தலைமையின் கீழ் அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்ட அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்துக்குரிய உத்தியோகத்தர்களுடன் சந்திப்பொன்று நடைபெற்றது. இச் சந்தர்ப்பத்திற்கு பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதிக் கமத்தொழில் அமைச்சின் பதிற் கடமையாற்றும் செயலாளரான திரு. அநுராதா  விஜேகோன் அவர்களும் கலந்து கொண்டார்கள். அவ்வந்த பெருந்தேட்டங்களில் காணப்படும் பிணக்குகள் மற்றும் எதிர்காலத்  திட்டங்கள் தொடர்பில் இங்குகலந்துரையாடப்பட்டது.