அதிமேதகு சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் "சுபீட்சத்தின்  நோக்கு" என்ற கொள்கையின் கீழ் இந்நாட்டில் இலவங்கப்பட்டைச்  செய்கையை கட்டியெழுப்பும்  நோக்கில் சிறிய அளவிலான காணிகளுக்குத்  தேவைப்படும் இலவங்கப்பட்டை கன்றுகள், மஞ்சள் கன்றுகள், கமுகு பிள்ளை  மற்றும் மிளகு  செடிகள் ஆகியவற்றை வெலிவிடிய திவிதுர பிரதேசத்தில் பயிர்ச் செய்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கும் திட்டம்  வெலிவிடிய திவிதுர பிரதேச சபையில் 2021.07.11 ஆந் திகதியன்று நடைபெற்றது.

பெருந்தோட்ட அமைச்சுக்குரிய ஏற்றுமதி விவசாய  அமைச்சுடன் இணைந்து இந்நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, வெலிவிடிய திவிதுர பிரதேச சபைத் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் வெலிவிடிய திவிதுர பிரதேச செயலாளர் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தார்கள்.