அதிமேதகு சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் "சுபீட்சத்தின் நோக்கு" என்ற எண்ணக்கருவை யதார்த்தமாக்கும் வகையில்
கூட்டுத்தாபன உள்நாட்டு வாசனைச் சரக்குப் பொருட்களை வாடிக்கையாளர் பொது மக்களுக்கு சுத்தமாகவும் மலிவு விலையிலும்  பெற்றுக்கொள்ள முடியுமான வகையில் "வாசனைச் சரக்குக் கட்டிடம்" 2021.08.16 ஆந் திகதியன்று இலக்கம் 74, கடுவெல வீதி, பத்தரமுள்ள என்ற இடத்தில் மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு வாசனைச் சரக்கு  உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் வகையில் அவர்களின் பொருளாதாரத்தை வலுவூட்டல் மற்றும் வாடிக்கையாளர் பொது மக்களுக்கு மலிவான விலையிலும் உயர் தரத்துடனும் பொருட்களை வழங்குவது இதன் அடிப்படை நோக்கமாக உள்ளது.


இந்நிகழ்வுக்கு கெளரவ பெருந்தோட்ட அமைச்சருடன் கெளரவ வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அவர்கள், சிறு தோட்ட பயிர் வளர்ச்சி தொடர்பான கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு கெளரவ இராஜாங்க அமைச்சர் ஜானக வக்குபுர அவர்கள், அமைச்சின் செயலாளர்கள் உள்ளடங்கலாக மட்டுப்படுததப்பட்ட அளவினோர் கலந்து  கொண்டார்கள்.