ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தினால் 29.03.2022 அன்று மாத்தளை உக்குவெலயில் ஆகிய பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வாசனைச் சரக்குக் கட்டிடங்களில்  புதிய தகவல் நிலையத்தை திறந்து வைத்தது.  

அங்கே ரன்வேலி யசஸ் ஸ்ரீ என்ற புதிய வகை ஏலக்காய் வகையொன்று அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் அப்பகுதியில் உள்ள வாசனைச்சரக்கு உற்பத்தியாளர்களுக்கு மானியங்களும் வழங்கப்பட்டது.  

இந்நிகழ்வுக்கு கௌரவ பெருந்தோட்ட அமைச்சர் அவர்களுடன் மத்திய மாகாண ஆளுநர் லலித் யு. கமகே, சிறு ஏற்றுமதி பயிர் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்  கெளரவ ஜானக வக்குபுர,  பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் ரவீந்திர ஹேவாவிதாரண உள்ளிட்ட  பல அதிகாரிகள் கலந்து  கொண்டார்கள்.