தென்னை பயிர்ச்செய்கை சபையின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விழாவை பெருந்தோட்ட அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன மற்றும் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தலைமையில் பத்தரமுள்ள, கொஸ்ஹேன, டென்சில்  கொப்பேகடுவ மாவத்தையில் அமைந்துள்ள தென்னைப் பயிர்ச்செய்கை சபையில்  2022.03.30 ஆந் திகதி இடம்பெற்றது.

முன்னாள் பிரதமர் சிறிமாவோ ஆர்.டி.பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் போது தென்னை பயிர்ச்செய்கைச் சபை நிறுவப்பட்டதுடன் அதற்கான தலைமையை இந்நாட்டின் முதற் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரான கலாநிதி கொல்வின் ஆர். டி சில்வாவா வகித்தார். 

தென்னைச் செய்கையை மேலும் பிரபலப்படுத்தும் நோக்கில் அப்பிரதேசத்தில் உள்ள தென்னை விவசாயிகளுக்கு தென்னை மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.  

இந்நிகழ்வில் பெருந்தோட்ட  அமைச்சின் செயலாளர் திரு. ரவீந்திர ஹேவாவிதாரண, இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. திஸ்ஸ ஹேவாவிதான அவர்களுடன் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.