"கைத்தொழிலிற்கான ஒரு நாடு என்றவகையில் நமது முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். இறக்குமதி செய்யப்படும் பொருட்களை இயன்றவரை குறைத்து அவற்றினை இந்த நாட்டில் உற்பத்தி செய்தல் வேண்டும். இந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதை முடிந்தவரை ஏற்றுமதி செய்ய வேண்டும்."
கெளரவ பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண அவர்கள் செப்டம்பர் 6 ஆம் திகதி காலி வலஹந்தூவ தோட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிறிய தேயிலைத் தோட்ட அபிவிருத்தி சங்க அலுவலக வளாகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
50 மில்லியன் ரூபாயினை முதலீடு செய்து, பொருளாதார மற்றும் சமூக ரீதியாக  சிறிய தேயிலைத் தோட்டத் துறையின் உற்பத்தித் திறனையும் தரத்தையும்  மேம்படுத்துவதற்கான ஆதரவு சேவைகளை வழங்குவதற்காக இந்த நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.


இதன்போது, சிறு தேயிலைத்  தோட்ட உரிமையாளர்களுக்கு 50 நீர்ப் பம்பிகளும், 20   தெளிப்பான்கள் உள்ளிட்ட மற்றும் சில உபகரணங்களும் விநியோகிக்கப்பட்டன.
2022 ஆம் ஆண்டு அனைவருக்கும் மிகவும் கடினமான காலப்பகுதி என்பதோடு, பெருந் தோட்டத் துறையில் உள்ள தேயிலைக் கைத்தொழிலில் மாத்திரம் உர நெருக்கடி காரணமாக தேயிலைக் கொழுந்துகளின் அறுவடை சுமார் 15%  இனால் குறைந்துள்ளதோடு,  2019 ஆம் ஆண்டில் தேயிலைக்  கொழுந்துகள் ஒரு கிலோவிற்கு ரூபா 80 ஆக செலுத்தப்பட்ட  அத்தொகை தற்சமயம் 250 ரூபாயினைத் விஞ்சியுள்ளது.  வரலாற்றில் மிக உயர்ந்த விலையாக கடந்த நாள் ஒரு கிலோ தேயிலைக்கு 420 வழங்கப்பட்டது மேலும் உரத் தட்டுப்பாடு  இல்லாதிருந்த 2020 ஆம் ஆண்டில் பறிக்கப்பட்ட தேயிலைக்  கொழுந்துகள் 280 கிலோ மில்லியன் என்பதோடு உரத் தட்டுப்பாடான 2021 ஆம் ஆண்டில் 300 கிலோ மில்லியன் அளவு வரை அதிகரித்ததாகவும் அதற்கான காரணம் வருடம் பூராகவும் பரவலாக பெய்த மழையே இதற்குக் காரணம் எனவும் கௌரவ அமைச்சர் தெரிவித்தார்.


மேலும், கருத்து தெரிவித்த கௌரவ அமைச்சர், தேயிலை பயிர்ச்செய்கைத் துறையில் நடைமுறைப்படுத்தப்படும் மண் பாதுகாப்பு, மண்ணின் தன்மையை அதிகரித்தல், பயிர் நாற்றுமேடைகளை அமைத்தல், நீர் முகாமைத்துவம், தாவர பராமரிப்பு போன்ற செயற்பாடுகள் மூலம் உரத் தட்டுப்பாட்டினால் ஏற்பட்ட  விளைச்சலை மீட்டெடுக்க முடியுமான நிலைக்கு மாற்ற முடியும் என்பதாகவும் அதற்காக சகல தேயிலை விவசாயிகளினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், முன்னாள் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் அவர்கள், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜானக தர்மகீர்த்தி, சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கலாநிதி துஷார பிரியதர்ஷன, பொது முகாமையாளர் தம்மிக்க மஹிபால, காலி மாவட்ட செயலாளர் மற்றும் பல அரச அதிகாரிகளும் பிரதேச அரசியல் அதிகாரிகளும் ஒன்று கூடியிருந்தனர்.