2019 ஆம் ஆண்டு முதன்முறையாக கேகாலை மாவட்டத்தில் பதிவாகிய இந்நாட்டில் தென்னைச் செய்கைக்கு தீங்கு விளைவிக்கும் வெள்ளை ஈக்களை ஒழிக்கும் வேலைத்திட்டம் கிராம மட்டத்தில் ஆரம்பமாகிறது. பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன அவர்களின் ஆலோசனையின் கீழ், தென்னை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தென்னை பயிர்ச்செய்கை சபையுடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சித் தொடரின் மற்றுமொரு கட்டம் ராகமை படுவத்தேயில் ஒக்டோபர் மாதம் 06 ஆந் திகதி நடைபெற்றது.

அங்கு, வெள்ளை ஈக்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பில் மக்களுக்கு அடிப்படை உதாரணங்களுடன் விழிப்பூட்டல் நடைபெற்றது. மேலும், வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த பயன்படுத்தக்கூடிய பூச்சிக்கொல்லி மருந்துகள் குறித்தும், பயன்படுத்தும் மருந்தளவு மற்றும் பயன்படுத்தும் முறை குறித்தும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி, மேலதிகமாக அங்கு சவர்க்கார நீருடன் வேப்பம் எண்ணெயைக்  கலந்து, வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் முறையை  நடைமுறையில் செய்து காண்பிக்கப்பட்டது. இந்த கலவையை தென்னை இலைகளின் அடிப்பகுதியில் நன்கு இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை 02 மாதங்களுக்கு தொடர்ச்சியாக தெளிப்பதன் மூலம்  வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தாலம்  என்றும் அதற்கு மேலதிகமாக  கிரீஸ் தடவிய மஞ்சள் பொலிதீனை தென்னை மரத்தின் தண்டில் தொங்கவிடுவது இளவட்ட ஈக்கள் ஈர்க்கப்படுவதன் மூலம் கட்டுப்படுத்த முடியும்  என்றும் அங்கு கூறப்பட்டது.

வெள்ளை ஈக்கள் உள்ளிட்ட தென்னை பயிர்ச்செய்கையில் ஏற்படும்  பிரச்சனைகளுக்கு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் தென்னை ஆராய்ச்சி நிறுவனம், தற்போது 1928 என்ற அவசர அழைப்பு இலக்கம் நிறுவப்பட்டுள்ளதுடன், 0704001928 என்ற வாட்ஸ்அப் இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வட்ஸ் அப் இலக்கத்துக்கு தென்னைப் பயிர்ச் செய்கையில்  ஏற்படும் நோய்கள் அல்லது பாதிப்புகள் குறித்த படங்களை  அனுப்புவதன் மூலம் தென்னைப் பயிர்ச் செய்கையில் ஏற்படும் பிரச்சினைகள் பற்றிய அடிப்படை அறிவை மக்களுக்கு வழங்கு முடியுமாக இருக்கும்.

இந்த வெள்ளை ஈ ஒழிப்பு தொடர்பான நடைமுறை விழிப்பூட்டல் நிகழ்வுக்கு தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் கலாநிதி சாரங்க அழகப்பெரும உள்ளிட்ட தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், தென்னைப் பயிர்ச் செய்கை சபை கம்பஹ மாவட்ட பிராந்திய முகாமையாளர் திரு. கபில ஹெட்டியாராச்சி உட்பட நிரல் நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து  கொண்டார்கள். இந்த வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம் வெள்ளை ஈக்களினால் பாதிக்கப்பட்டுள்ளது என அடையாளம் காணப்பட்ட மாவட்டங்களில் தற்சமயம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.